Monday, May 17, 2010

Just wrote this thinking about how a rowdy vl feel if he falls madly in love with a gal…

Do send ur comments

சாகாதது அதுவும் என்னை சாகடிக்குது

என்னிருண்ட நெஞ்சோரமாய் இளஞ்சாரல் அடிக்குது

கத்தியோட தான புள்ள நான் திரிஞ்சேன்

இப்ப என் புத்தியோட தான நீயும் இனைஞ்ச

அட ரத்தக் கற அது எனக்கொன்னும் புதுசில்ல

தோளில பதிஞ்ச உன் கைரேகை யின்னும் மறையல

பல முறை சொல்லியும் கேக்கல என் மனசு

அது தவியா தவிக்குதடி கிளியே உன நினச்சு

சோறு தண்ணி அத பத்தி நினப்பில்ல

உனப் பாத்துப்பேச எனக்கும் வாய்ப்பில்ல

அனக்கு தடம் மாறிப் போனேன் அடி ரவுடியாக

இனக்கு தடுமாறிப் போறேனே பொடிப் பொடியாக

கதவுல நசுங்கின ஒரு பள்ளிப் போல

உன் பார்வையில என் மனசும் நசுங்கிடுச்சே

கொஞ்ச கொஞ்சமா நானும் சேத்து வெச்ச

என் சிரிப்ப எல்லாம் நீயும் கடத்திப்புட்ட

பசும் பால் போல என் மனசும் சுத்தமடி

கொடுந் தேள் போல என சுத்தி விஷமடி

உன ஒதுக்கிட்டு போக தானே நினச்சேன்

என் நிழல் அது உன்ன ஒட்டியே நின்னுச்சே

என் முகமூடி அதுவும் விலகுமா

முகதில்ல நல்ல ஒளியும் பரவுமா

நாறும் சாக்கடையா நான் இருந்தும்

சந்தன வாசம் அத உணருறேன்

பாவத்தின் வடிவம் நானாய் இருந்தும்

பெண்பூவே உன்ன நானும் ரசிக்கிறேன்

சாமியும் சாத்தானும் தான் கைக்கோர்க்குமா

என் காதல் அதுவும் தான் ஜெயிக்குமா